மக்களவை தேர்தல்: கே.எஸ். அழகிரி தலைமையில் குழு அறிவிப்பு!

மக்களவை தேர்தல்: கே.எஸ். அழகிரி தலைமையில் குழு அறிவிப்பு!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் அடங்கிய தமிழகத்துக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீடுகள், பூத் கமிட்டி பணிகள் என தேர்தல் காய்ச்சல் நாடு முழுவதும் பரவி வருகிறது.

இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான 35 பேர் கொண்ட தேர்தல் குழுவை காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இந்த பட்டியலில் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். அதில், ப. சிதம்பரம், செல்வப் பெருந்தகை, கே.வி. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன் நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகுர், குமரி அனந்தன், மணி சங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், கிருஷ்ணசுவாமி, கே.ஆர். ராமசாமி, விஷ்ணு பிரசாத், ஜே.எம். ஆரூண், நாசே ராமச்சந்திரன், மோகன் குமார மங்கலம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com