அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

மக்களவைத் தேர்தல்: பிப்.21 முதல் அ.தி.மு.க.வில் விருப்ப மனு!

மக்களவைத் தேர்தலில் அ. தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு பிப்ரவரி 21ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தி.மு.க.வின் சார்பில் போட்டியிட விண்ணப்பம் வழங்கல் தொடங்கிவிட்டது. அதைத் தொடர்ந்து அ. தி.மு.க. சார்பிலும் விருப்ப மனு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ. தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 வரை தலைமை கழகத்தில் வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பக் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ. 20 ஆயிரமும் தனித் தொகுதிக்கு ரூ. 15 ஆயிரமும் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com