மக்களவைத் தேர்தல்: பிப்.19 முதல் தி.மு.க.வில் விருப்ப மனு!
மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க. தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கான விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 ஆயிரம் என்றும், விண்ணப்பப் படிவம் ரூ 2,000 என்றும் கூறப்பட்டுள்ளது.