விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்

விஜயகாந்த் போன்ற நேர்மையாளரை இழந்திருப்பது ஒருவித தனிமை! - நடிகர் கமல்ஹாசன்

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது, “சகோதரர் விஜயகாந்த் நட்சத்திர அந்தஸ்து பெறுவதற்கு முன்னர் எப்படிப் பழகினாரோ அதே மாதிரிதான் அவர் பெரிய நட்சத்திரமாக ஆன பிறகும் எங்களிடம் பழகினார். அவரிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், அவரிடம் எந்தளவிற்கு பணிவு இருக்கிறதோ , அந்தளவிற்கு நியாமான கோபமும் வரும். அந்த கோபத்தின் ரசிகன் நான். அதனால் தான் விஜயகாந்த் மக்கள் பணிக்கு வந்தார் என்று நம்புகிறேன். இப்படிப்பட்ட நேர்மையாளர்களை இழந்திருப்பது. ஒருவித தனிமைதான். என்னை மாதிரியான ஆட்களுக்கு. நல்ல நண்பனுக்கு நான் விடை கொடுத்துவிட்டுச் செல்கிறேன்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com