மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை மட்டுமே; கோவைக்குப் பதிலாக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு!

அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் தலைவர்கள்
அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் தலைவர்கள்
Published on

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதன் கைவசம் உள்ள தொகுதிகளில் மதுரை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கோவைக்குப் பதிலாக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் இதற்கான உடன்பாடு அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், கோவை தொகுதியைப் பரிசீலனைக்கு வைத்திருந்தோம்; கடந்த முறை தி.மு.க. வென்ற தொகுதி எங்களுக்கும் நாங்கள் வென்ற தொகுதி அவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன; அவ்வளவுதான் என்றார்.

முன்னதாக, கடந்த மாதம் 29ஆம் தேதியன்று இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com