மதுரை: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு
மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு
Published on

மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 36,660.35 கோடி முதலீட்டுகளுக்கான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

மதுரையில் தமிழ்நாடு வளர்கிறது என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் 56,766 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வகை செய்யும் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ.11,700 கோடி ஒப்பந்தமும் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, வேலை வைத்து அரசியல் செய்ய துடிப்போருக்கு மத்தியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ; அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் முதலீடுகள் அதிகம்; மதுரை மாவட்டத்துக்கு ஏஐ தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com