மதுரையில் எரிந்த ரயில் பெட்டி
மதுரையில் எரிந்த ரயில் பெட்டி

மதுரை ரயில் விபத்து; எரிந்த நிலையில் ரூ. 200, ரூ.500 நோட்டுகள் கண்டெடுப்பு!

மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் தகரப் பெட்டியில் எரிந்த நிலையில் ரூ. 200, ரூ. 500 நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பெட்டியில் தீ விபத்து நேரிட்டது தொடர்பாக தடயவியல் துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணத்தை கண்டறிந்தனர்.

இதில் ரூ.200 கட்டுகள், ரூ.500 கட்டுகள் அடங்கிய பணம் பெட்டியில் பாதி எரிந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒருலட்சம் இருக்கக்கூடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணமாக, ரயிலில் சமைத்து சாப்பிடுவதற்காக சமையல் எரிவாயு உருளைகள், 30 கிலோக்கும் அதிகமான விறகுகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் இருந்ததே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயில் பெட்டியில் உள்புறமாக இருந்து ரயில் பெட்டி கதவை பூட்டிவிட்டு, தேநீர் தயாரிக்க சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக உயிர்த்தப்பிய பயணி தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com