முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்

கல்வி நிதியுதவியா... வதந்தி!- முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மறுப்பு!

கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்வதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஆண்டுதோறும் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்போது, பல்வேறு அறக்கட்டளைகள் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், ஏழை எளிய மாணவர்களுக்கு அவை கல்வி நிதியுதவி செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. இப்போது செல்பேசி இல்லாத ஆட்களே இல்லை என ஆகிவிட்டபிறகு, வாட்சாப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் என்னென்ன தகவல்கள் வருகின்றனவோ அவற்றையெல்லாம் அப்படியே மற்றவர்களுக்குப் பரப்பிவிடுவது சமூகத்தில் பரவலான பழக்கம் ஆகிவிட்டது. 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளை மூலம் கல்லூரி சேரும் மாணவர்களுக்கு முழுதாகவும் பாதியாகவும் படிப்புக்கட்டணம், விடுதிக்கட்டணத்தை உதவித்தொகையாக வழங்குகிறார் என்று ஒரு வாட்சாப் கார்டாக வலம்வந்துகொண்டிருக்கிறது. 

அந்த வாட்சாப் தகவலில் உள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு உறுதிசெய்ய முயன்றபோது, அந்த எண்ணுக்கு இணைப்பே கிடைக்கவில்லை. 

பல முறை முயன்றும் இதே கதிதான்!

அடுத்ததாக, பாண்டியராஜன் அறக்கட்டளை தரப்பு விளக்கம் பெற அவரைத் தொடர்புகொண்டோம்.

“ விருதுநகர், ஆவடி தொகுதிகளில் குறிப்பிட்ட அளவுக்கு உதவிகளைச் செய்துவருகிறோம். ஆனால் இப்படிப் பரப்பப்படுவதைப் போல அல்ல. இது தவறான தகவல். இதை யாரும் நம்பவேண்டாம்.” என்று விளக்கம் அளித்தார், பாண்டியராஜன்.    

logo
Andhimazhai
www.andhimazhai.com