மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரவேற்று கோலமிட்ட பெண்கள்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரவேற்று கோலமிட்ட பெண்கள்

மகளிர் உரிமைத் திட்டம்: தமிழகத்தில் பெண்கள் கோலமிட்டு வரவேற்பு!

இன்று தொடங்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை வரவேற்று மாநிலத்தின் பல பகுதிகளிலும் கும்மியடித்து, கோலமிட்டு பெண்கள் வரவேற்று வரவேற்றுள்ளனர்.

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால், திட்டம் எப்போதும் தொடங்கும் என்பது கேள்விக்குறியாக நீண்டது. கடந்த சட்டமன்ற கூட்டத்தில், இதற்கான அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணா பிறந்தநாளான இன்று அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, தகுதி வாய்ந்த பயனாளர்கள் இறுதி செய்யப்பட்டன. நேற்று முன்தினம் தொடங்கி, பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு சிறிதளவு பணம் அனுப்பி முன்னோட்டம் பார்க்கப்பட்டது. நேற்றே பல மாவட்டங்களில் ஆயிரம் ரூபாயை முழுமையாக செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காஞ்புரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, இந்தத் திட்டத்தை வரவேற்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் கோலமிட்டு வரவேற்றனர். பெரும்பாலும் அந்த கோலத்தில் தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.

ச.ம.உ தமிழரசி
ச.ம.உ தமிழரசி

முன்னாள் அமைச்சரும் மானமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி மகளிர் உரிமைத் திட்டத்தை வரவேற்று பெண்களுடன் சேர்ந்து கும்மியடுத்து ஆடி வரவேற்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com