பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய விவகாரம்: தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் மீது வழக்கு பதிவு!

பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய விவகாரம்: தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் மீது வழக்கு பதிவு!

வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் மற்றும் மருமகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணனின் வீட்டில் 17 வயது சிறுமி வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலைகளை அதிகமாக இருந்ததால் அந்த பெண் வீட்டிற்கே சென்றுவிடுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், இங்குதான் வேலை செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். ஆபாசமாக திட்டுவது, அடிப்பது, சூடு வைப்பது என அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் ஆண்டே மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

குழந்தை பாதுகாப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம், தாக்குதல் நடத்தியது, ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com