பணிப் பெண் சித்ரவதை: தி.மு.க., எம்.எல்.ஏ. மகன், மருமகள் கைது!

பணிப் பெண் சித்ரவதை: தி.மு.க., எம்.எல்.ஏ. மகன், மருமகள் கைது!

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ அவரின் மனைவி மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கைது செய்துள்ளனர்.

பல்லாவரம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினாவும் தங்களது வீட்டில் பணிபுரிந்து இளம் பெண்ணை துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினர். அவர்களைப் பிடிக்க 3 தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், ஆண்ட்டோ மதிவாணனையும் மெர்லினையும் தமிழக தனிப்படை போலீஸார் ஆந்திரா அருகே கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், உடனடியாக சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அழைத்து வரப்படும் இருவரிடமும் விசாரணை நடத்தி பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு இன்று காலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com