ரூ.2,500 பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு- நிதியமைச்சர் மரிய வில்சன்

அமைச்சர் மரிய வில்சன்
அமைச்சர் மரிய வில்சன்
Published on

மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவது பற்றி வரும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார். 

வேளாங்கண்ணியில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலங்களில் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு இல்லை என்றும் அதனால் அவர்கள் 5 ஆண்டுகள் கடனை இரத்துசெய்தார்கள் என்றும் ஆனால் இப்போது ரிசர்வ் வங்கியின் 5 நாள் கட்டுப்பாட்டால்தான் பயிர்க்கடனை இப்படிச் செய்ய வேண்டியிருந்தது என்று அமைச்சர் மரிய வில்சன் கூறினார்.

முன்னதாக, தேர்தல் அறிக்கையில் சொன்னதற்கு மாறாக த.வெ.க அரசு செய்வது ஏன் என செய்தியாளர் கேட்டதற்கு, அவர் இவ்வாறு மழுப்பலாக பதில்கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com