விஜய் கட்சிக்கு ‘டப்’ கொடுக்கவா மல்லை சத்யாவின் புதிய கட்சி..?

திராவிட வெற்றிக் கழகம் கட்சி தொடக்க நிகழ்வு
திராவிட வெற்றிக் கழகம் கட்சி தொடக்க நிகழ்வு
Published on

திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை மல்லை சத்யா இன்று தொடங்கியுள்ளார்.

மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் மல்லை சத்யா. கட்சி தலைமைக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட பிரச்சினையால் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து ஆதரவாளர்களுடன் இணைந்து புதிய கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் கட்சி பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதனையடுத்து அண்மையில் செய்தியாளர்களை மல்லை சத்யா, கட்சியின் தொடக்க விழா 20ஆம் (அதாவது இன்று) அடையாறில் நடைபெறும் அன்றைய தினம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி, மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சத்யா நியமனம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள 7 ஸ்டார்களும் 5 திராவிட இயக்க தலைவர்களையும் அகில இந்திய அளவில் டாக்டர் அம்பேத்கர், உலக அளவில் காரல் மார்க்ஸ் ஆகியோரை குறிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நாள்தான் நீதிக்கட்சி உருவாக அடித்தளம் அமைத்த நாள் என்றும் திராவிடர்களுக்கு சேவை செய்ய திராவிட இயக்கங்களால்தான் முடியும் என்றும் மல்லை சத்யா கூறினார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போன்றே, திராவிட வெற்றிக் கழகம் பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com