
மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றவர் அங்கு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன். இவர் கம்பத்தில் இருந்து ஏலக்காய் ஏற்றி வந்தபோது, லாரி தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, லாரி எரிந்த சம்பவம் குறித்து மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக பாலகிருஷ்ணன் சென்றுள்ளார்.
அப்போது, சந்தேகத்தின் பேரில் விசாரிக்க பாலகிருஷ்ணனை இரவு முழுவதும் போலீசார் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில், காவல்நிலையக் கழிப்பறையில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் இன்று காலை சடலமாகக் கிடந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ஆனால், அந்த விளக்கத்தை ஏற்க முடியாது என்று பாலகிருஷ்ணனின் மனைவி, உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.