இம்மானுவேல் சேகரன்
தமிழ் நாடு
இம்மானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் மணிமண்டபம் – முதலமைச்சர் அறிவிப்பு!
பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தியாகி இம்மானுவேல் சேகரனின் 66-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு 6000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுன் கூடிய மணிமண்டபம், நகராட்சி இடத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு இம்மானுவேல் சேகரனின் மகள் சுந்தரிபிரபா ராணி நன்றி தெரிவித்துள்ளார்.