சென்னை மருத்துவமனையில் மன்சூர் அலிகான்
சென்னை மருத்துவமனையில் மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகானுக்கு மோரில் விசமா?- மருத்துவமனையில் சிகிச்சை!

நடிகரும் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான மன்சூர் அலிகான் நேற்று குடியாத்தம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மயங்கிவிழுந்ததால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் இன்று காலையில் அவரின் பெயரில் வெளியான அறிக்கையில், மன்சூரின் உடல்நிலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க... குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்... மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, டிரீட்மெண்ட் குடுத்தும் வலி நிக்கல.

வலி அதிகமானதால் சென்னைக்கு கே.எம்.  நர்ஸிங் ஹோம் க்கு ஆம்புலன்ஸ் ல கூட்டிட்டு வந்து, டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக டிரிப்ஸ் குடுத்தார்கள். இன்று மதியம் 2' மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுகிறது.” என்று மன்சூரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com