மன்சூர் அலிகான் அடுத்து... காங்கிரசில் இணைய மனு!

மன்சூர் அலிகான் - செல்வப்பெருந்தகை
மன்சூர் அலிகான் - செல்வப்பெருந்தகை
Published on

சூடான அரசியல் களத்தில் அவ்வப்போது ஸ்டண்ட் அடித்துவரும் நடிகர் மன்சூர் அலிகான், சுயேச்சையாக வேலூரில் போட்டியிட்டது தெரிந்ததே. அதன் முடிவுகூட வருவதற்குள்ளாக அடுத்ததாக அவர் இன்னொரு அதிரடி கவன ஈர்ப்பில் இறங்கியிருக்கிறார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை இன்று காலையில் சென்னை, சத்யமூர்த்தி பவனில் சந்தித்து அக்கட்சியின் தான் இணையவிருப்பதாக மனு அளித்தார். தன்னுடைய அகில இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியையும் காங்கிரசுடன் இணைக்கவும் அவர் கேட்டுக்கொண்டார். 

பதிலளித்த செல்வப்பெருந்தகையோ, தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, இந்த நடைமுறைகளை வைத்துக்கொள்ளலாம் எனக் கூறி அனுப்பினார். 

கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்தின்போது உடல்நலக் குறைவால் சென்னைக்குக் கூட்டிவரப்பட்ட மன்சூர், தனக்கு மோரில் விசம் வைத்து கொடுத்துவிட்டார்கள் எனக் குற்றம்சாட்டியிருந்தது, நினைவிருக்கலாம்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com