த.வெ.க. எம்.எல்.ஏ.களாகப் பதவியேற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா!

Maragatham Kumaravel and Sathyabama sworn as TVK MLA
மரகதம் குமரவேல், சத்தியபாமா த.வெ.க. எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர்.
Published on: 

இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா ஆகியோர் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்றுக் கொண்ட இருவரும் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முன்னிலை வகித்தனர்.

பின்னர், இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தனர்.

அப்போது, "அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்களை மீறி, முதலமைச்சர் விஜய்யின் சூறாவளிப் பிரச்சாரத்தால்தான், நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம்." என்று மரகதம் குமரவேல் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சத்தியபாமா, "இடைத்தேர்தலுக்காக என்னைப் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்தனர்; என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி, என்னை வெற்றிபெறச் செய்துள்ள தாராபுரம் மக்களுக்கான தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வேன்." என்று கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com