சென்னை மேயர் பிரியா போலீஸ் ஆணையரிடம் புகார் மனு!

Mayor Priya
மேயர் பிரியா
Published on

சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் மேயர் பிரியா புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபர்கள் சமூக ஊடகங்கள் வழியாக தனக்கு தொல்லை தருவதாக சென்னை மேயர் பிரியா புகார் அளித்துள்ளார்.

சில மர்ம நபர்கள் சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாட்சாப், முகநூல் போன்ற சமூக ஊடகப் பக்கங்களில் தன்னைத் தவறாகச் சித்திரித்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

அவரின் பேட்டிகள் போன்ற வீடியோக்களைத் தவறாகத் திருத்தம் மேற்கொண்டு தனக்கு தொடர்ந்து அனுப்புவதாகக் கூறினார்.

அவருடைய மொபைல் எண்ணிற்கு தவறாகச் சித்தரிக்கப்பட்ட அவரின் படங்கள், வீடியோக்களை மர்ம நபர்கள் தொடர்ந்து அனுப்பிவருவதாக அவர் தன் புகாரில் கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய அலுவலக எண்ணிற்கும், மர்ம நபர்கள் அழைத்து தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அவருக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர்களின் எண்கள், அவர்கள் திருத்தம் செய்த புகைப்படங்கள், காணொலிகள் ஆகியவற்றை காவல் ஆணையரிடம் கொடுத்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com