வைகோ
வைகோ

கர்நாடகத்தை வலியுறுத்தி ம.தி.மு.க. திருச்சியில் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

காவிரியில் கர்நாடகம் நீரைத் திறக்க வலியுறுத்தியும் இப்பிரச்சினையில் பாராமுகம், மாகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்க முயற்சி என்கிறபடி நடந்துகொள்ளும் மத்திய அரசைக் கண்டித்தும் வரும் 16ஆம் தேதி திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என தூண்டிவிட்டு, கர்நாடகத்தில் போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும்  கன்னட  அமைப்புகளை கண்டித்தும், எஞ்சிய குறுவைப் பயிரை பாதுகாத்திட, சம்பா சாகுபடியைத் தொடங்கிட தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரைத் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும், தமிழக அரசு பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு நிதியை குறைத்தும், மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்காமலும் அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், ம.தி.மு.க. சார்பில் அக்டோபர் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோவின் மகனும் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தலைமைவகிக்கிறார். திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ம.தி.மு.க.வினர் பங்கேற்பார்கள் என்று அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com