மின்வெட்டு
மின்வெட்டு

மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை! - தலைமைச் செயலாளர் பேட்டி!

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மின்சார வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின், செய்தியாளர்களுடன் பேசிய அவர், மக்களுக்கு தங்கு தடையின்றி மின் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

”மின் தடை ஏற்பட்டால் மக்கள் மின்னகத்தை தொடர்புகொண்டு மின் விநியோகம் சீரமைப்பு பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக மின் தேவை 20,830 மெகா வாட் ஆக அதிகரித்துள்ள நிலையில், மே மாத இறுதி வரை அதிகளவு மின் நுகர்வு ஏற்பட்டாலும், அதை சமாளிக்க மின்சார வாரியம் தயாராக உள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

கோடைக் காலத்தில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறுவது குறித்து, 19 மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com