மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 82.

பங்காரு அடிகளார் சிறு வயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார். அதன் காரணமாக ஆசிரியர் பணியிலிருந்து விலகி, மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக செயல்பட்டு வந்தார். பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்டார். கோயில் கருவறைகளில் பெண்களும் பூஜை செய்யலாம் எனும் வழக்கத்தை தமிழகத்தில் பரவலாக்கியவர் பங்காரு அடிகளார்தான்.

மேலும், ஆதிபராசக்தி தொண்டு நிறுவன சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் நடத்தப்பட்டு வருகினறன.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பங்காரு அடிகளார், இன்று மாலை காலமானார்.

பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையைப் பாராட்டி, மத்திய அரசு 2019இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com