சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

நாளை மெட்ரோ ரயில் சனிக்கிழமை நேரப்படி இயங்கும்!

நாளை உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சென்னை மெட்ரோ ரயில் வண்டிகள் சனிக்கிழமை பட்டியலின்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை எட்டு மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும் பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில் வண்டி வசதி கிடைக்கும் படி செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை 5 மணி முதல் எட்டு மணி வரையிலும் பின்னர் முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அதைத் தொடர்ந்து எட்டு மணியிலிருந்து இரவு பத்து மணி வரையிலும் ஏழு நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.  

இரவு 10 மணி முதல் 11 மணி வரை கால் மணி நேரத்துக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com