மத்தியக் குழுவினரிடம் முதல்வர் ஆலோசனை
மத்தியக் குழுவினரிடம் முதல்வர் ஆலோசனை

மிக்ஜம் புயல்; ரூ.12,600 வேண்டும் - தமிழக அரசு கோரிக்கை!

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய ரூ. 12 ஆயிரத்து 600 கோடி நிரந்தர நிவாரண தொகை வேண்டும் என்று மத்தியக்குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டம் வெள்ள நீரால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்த பாதிப்பு தொடர்பாக கடந்த 5ஆம் தேதி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உடனடியாக தமிழ்நாட்டுக்கு ரூ. 5,060 கோடி நிதியை விடுவிக்குமாறு கோரியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 450 கோடியை அனுமதிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மழை வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த மத்திய பாதுக்கப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கா மத்திய குழுவை அனுப்பவத தெரிவித்தார்.

அதன்படி, கடந்த 11ஆம் தேதி சென்னை வந்த மத்திய ஆய்வு குழு, இரண்டு நாள்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டது.

இந்த நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மத்திய குழு ஆலோசனை நடத்தியது. அப்போது மழை வெள்ளத்தால் சாலை பள்ளிக்கள், அரசு கட்டடங்கள், பாலங்கள் , மின் கம்பங்கள், மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளதை சுட்டிக்காட்டிஅதனை சீர் செய்ய தற்காலிக நிவாரண நிதியாக ரூ. 7033 கோடியும், நிரந்தர நிவாரண நிதியாக ரூ. 12,659 கோடியும் மத்திய அரசு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், மீட்பு பணிகள் சிறப்பாக இருந்ததாக மத்திய குழு கூறியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.

முதலமைச்சரின் கோரிக்கையையும், மத்திய குழு செய்த ஆய்வு அறிக்கையையும் அடுத்த 7 நாட்களுக்குள் மத்திய அமைச்சகங்களுக்கு மத்திய குழு அனுப்பும் என்றும் , அதனை அடுத்து தற்காலிகமாகக் குறிப்பிட்ட அளவிலான நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com