முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெள்ள நிவாரண நிதி வழங்கிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெள்ள நிவாரண நிதி வழங்கிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

மிக்ஜம் புயல் மழை மீட்பு பணி: வி.சி.க. சார்பில் ரூ. 10 லட்சம் நிதி!

வெள்ள நிவாரண நிதியாக விசிக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார்.

அதன்படி, அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள் இணைந்து ரூ. 10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த தொகையினை வழங்கினார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, பனியூர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com