ஆவினில் ஒரு கோடி லிட்டர் பால்!

ஆவினில் ஒரு கோடி லிட்டர் பால்!
Published on

ஆவின் மூலமாக அன்றாடம் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவை ஒரு கோடி லிட்டராக உயர்த்த வேண்டும்; அதற்கேற்ப கட்டுமானத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வெண்மணி சந்திரன், பொதுச்செயலாளர் பெருமாள், பொருளாளர் இரவி ஆகியோர் பால்வளத்துறைச் செயலாளர், ஆணையரை இன்று சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். 

பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி பசும்பாலுக்கான விலையை 45ரூபாயாகவும், எருமைப்பாலுக்கான விலையை 60 ரூபாயாகவும் வழங்கவேண்டும் என்று முதன்மையாக வலியுறுத்தினர். 

அரசுப் பள்ளிகளில் சத்துணவில் பாலையும் சேர்க்கவேண்டும், ஆவின் தீவன ஆலைகளை முழுவதுமாக இயக்கவேண்டும், ஆவினுக்கு சுழல்நிதியாக அரசு ஆயிரம் கோடி ரூபாயை வழங்கவேண்டும் என்பன உட்பட 23 கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com