விஜய் அமைச்சரவையில் வி.சி.க. சேர ஆதவ் அழைப்பு!

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா
Published on

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் வி.சி.க.வும் முஸ்லிம் லீக் கட்சியும் சேரவேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னை, அயோத்திதாசர் மணிமண்டபத்தில் அவருக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலையில் மலர் மரியாதை செலுத்தியபின்னர், அமைச்சர் ஆதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இதைக் கூறினார்.

அ.தி.மு.க.வை அமைச்சரவையில் சேர்ப்பதாகக் கூறப்படும் நிலையில், அதைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ” தேர்தலில் மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வுடன் சேர்ந்து பின்புற வழியாக ஆட்சியில் அமரத் திட்டமிட்டார். இதை அ.தி.மு.க.வில் சி.வி.சண்முகம் தலைமையிலானவர்கள் உணர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நிலைப்பாடுகளுக்கு எதிரானது எனக் கூறி, த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மற்ற பிரச்னைகளில் சி.வி.சண்முகம் தரப்பினர் சட்டப்படி எதிர்கொள்ளட்டும்.” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதில் அளித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com