
போதைப்பொருள் கடத்தல்காரனுடன் தொடர்புபடுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரின் கட்சி ஐடி அணியும் தன் மீது அவதூறு பரப்பியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்காக ஸ்டாலினும் தி.மு.க. ஐ.டி. அணியும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இரு தரப்புகளும் சமூக ஊடகங்களில் பகிர்ந்த பொய்த்தகவலைப் போலவே முதன்மையாக மன்னிப்புத் தகவலையும் வெளியிட வேண்டும் என்றும் ஆதவ் அனுப்பியுள்ள வழக்குரைஞர் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அவதூறுக்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் அவரின் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
கடிதம் கிடைக்கப்பெற்ற இரண்டு நாள்களுக்குள் இவற்றைச் செய்யாவிட்டால், மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படும் என்றும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆதவ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.