போதைப்பொருள் வழக்கா?- ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் மறுப்பு!

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா
Published on

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மனைவி, அவரின் குடும்பத்தினரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தி.மு.க. ஆதரவு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டன. அந்தக் கட்சியின் சமூக ஊடக அணிகளும் இந்தத் தகவலை மும்முரமாகப் பரப்பிவந்தன. குறிப்பாக, ஆதவின் மனைவி டெய்சியின் தாய்மாமாவும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசின் அண்ணனுமான ஜான் பிரிட்டோ என்பவர்தான் இலங்கைக்கு கடத்தல்செய்வதில் முக்கிய குற்றவாளி என்று அந்தத் தரப்புகள் கூறிவந்தன. 

இந்த நிலையில், ஜான் பிரிட்டோ சென்னை போலீஸ் ஆணையரகத்தில் நேரில் புகார் மனு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள் என்றும் அவர் கூறினார். 

அந்த ஜான் பிரிட்டோ தான் அல்ல என்றார் அவர். 

கேரளத்தில் தங்கள் மீது ஒரு வழக்கு இருக்கிறது என்றும் அது லாட்டரி தொழில் தொடர்பானது என்றும் அவர் கூறினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com