27 புதிய தடுப்பணைகள், 9 அணைக்கட்டுகள், 6 பகிர்வு அணைகள் - அமைச்சர் ஆனந்த்

Minister Aanand
அமைச்சர் ஆனந்த்
Published on

தமிழ்நாட்டில் 27 புதிய தடுப்பணைகள், 9 அணைக்கட்டுகள், 6 பகிர்வு அணைகள் கட்டப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறையின் அறிவிப்புகளை துறை அமைச்சர் ஆனந்த் நேற்று வெளியிட்டார்.

முக்கியமான அறிவிப்புகள்:

1) வெள்ள உபரி நீரைத் தேக்கவும், விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் ரூ. 206.75 கோடி செலவில் 13 மாவட்டங்களில் 27 புதிய தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளன.

2) ஏரிகள், கண்மாய்களுக்குத் தடையின்றி நீர் வழங்குவதற்காக 6 மாவட்டங்களில் ரூ. 97.8 கோடி செலவில் 9 அணைக்கட்டுகள் கட்டப்படும்.

3) ஆற்றுப்படுகையின் அரிப்பைக் கட்டுப்படுத்தி, நிலத்தடி நீர் செறிவூட்டலை அதிகரிக்க ரூ. 37.10 கோடி செலவில் மதுரை உட்பட 2 மாவட்டங்களில் படுகை அணைகள் அமைக்கப்படும்.

4) ஏரிகள், கண்மாய்களுக்கு முழுதிறனோடு நீரினைப் பகிர்ந்தளிக்க 5 மாவட்டங்களில் ரூ. 13,87 கோடி செலவில் 6 பகிர்வு அணைகள் அமைக்கப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com