கற்பழிப்பு... சட்டப்பேரவையில் நெளியவைத்த அமைச்சர் ஆதவ்!

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Published on

சட்டப்பேரவையில் இன்று காலையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, அடிக்கடி குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கடந்த ஆட்சியில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிக அளவில் நிகழ்ந்ததாகப் புள்ளிவிவரங்களை எடுத்துவைத்தார். 

அப்போது, அவர் பல முறை கற்பழிப்பு என்று குறிப்பிட்டார். 

அரசியலிலும் அரசாங்க நிர்வாகத்திலும் பல சொற்களை அதன் களங்கமுறு அர்த்தம் காரணமாக, பதிலாக, மாற்றுச் சொற்களைப் பயன்படுத்துவது நடந்துவருகிறது.

எடுத்துக்காட்டாக, மாற்றுத்திறனாளி, திருநர் என்பன போன்ற சொற்கள் கையாளப்பட்டு வருகின்றன. 

ஊடகங்களிலும் இப்படியேதான் பதியப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், பாலியல் வன்முறை எனும் சொல் பரவலாகப் புழக்கத்தில் வந்துவிட்ட பின்னரும், முக்கிய அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜூனா, பல முறை எந்த சங்கடமும் இல்லாமல் அவையில் கற்பழிப்பு என்று குறிப்பிட்டார். 

இந்தச் சொல் குறித்த அரசியல் சரித்தன்மை கொண்ட உறுப்பினர்கள் இதனால் சங்கடமாக உணர்ந்தனர்.

குறிப்பாக, பல பெண் உறுப்பினர்கள் அசாதாரணமாக உணர்ந்தனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com