பல்பு வாங்கிய அமைச்சர்... தி.மு.க.தான் நீட்டைக் கொண்டுவந்ததா?

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Published on: 

சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்புத் தீர்மானத்தில் தி.மு.க. சார்பில் டாக்டர் முத்துராஜா பேசினார். அப்போது அமைச்சர்கள் குறுக்கிட்டனர். 

குறிப்பாக, அவர் அமைச்சர் நிர்மல்குமாரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்தவர் என மறைமுகமாகக் குறிப்பிட்டார். அதற்கு ஆளுங்கட்சித் தரப்பில் கடுமையாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. 

இதனிடையே, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுந்து, நாங்களும் தி.மு.க.வின் வரலாற்றைப் பேசுவோம்; அது மத்திய அமைச்சரவையில் என்ன செய்தது என்பதைச் சொல்வோம் என்றவர், ஒரு கட்டத்தில், தி.மு.க.வின் முன்னாள் மைய அமைச்சர் காந்திசெல்வன்தான், நீட் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார் எனக் குறிப்பிட்டார். 

அதற்கு தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எழுந்து, அதைத் தவறு என்றதுடன், காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத்தான் அப்போது மசோதாவைத் தாக்கல்செய்தார் என்று குறிப்பிட்டதும், அவையில் சிறிது அமைதி ஏற்பட்டது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com