தமிழ் நாடு
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடுதிரும்புவார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
காலைச் சந்திப்புகளை முடித்துக்கொண்டு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு அங்கு சில சோதனைகள் செய்யப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டாலினின் மனைவி துர்கா, மூத்த அமைச்சர் துரைமுருகன் உட்பட பலரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அவரைப் பாரத்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் துரைமுருகனிடம் முதல்வருக்கு என்ன ஆயிற்று என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ஒன்றும் ஆகவில்லை; நலமாக இருக்கிறார்; விரைவில் வீடுதிரும்புவார் என்றார்.
எப்போது வீடுதிரும்புவார் என மீண்டும் ஒருவர் கேட்க, இன்று மாலையேகூடத் திரும்பலாம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.