என்னாது... ஆந்திராவுக்குப் போச்சா?- டிஆர்பி ராஜாவை வெளுத்த அமைச்சர் கீர்த்தனா!

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா
Published on

தமிழ்நாட்டுக்கு வரவிருந்த தொழிற்சாலை ஆந்திர மாநிலத்துக்குப் போன விவகாரம் குறித்து தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா இன்று மௌனம் கலைத்துள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதைப் பற்றி உரிய இடத்தில் பேசும்போதுதான் யாரும் இதை மறைக்காமல் இருக்கும்படி செய்யமுடியும்; சட்டப்பேரவையில் இதைப் பற்றி கேட்பார்கள் என நினைக்கிறேன்; அங்கு ஆதாரத்தோடு தேதி அளவுக்கு விவரங்களோடு விளக்கம் தருவேன் என்று அமைச்சர் கீர்த்தனா பதில் அளித்தார்.

மேலும், டிஆர்பி ராஜா இன்னும் தன்னை தொழில் துறை அமைச்சர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்; அவரை மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்பதை அவருக்கு யாராவது சொல்லுங்கள் என்றும் அமைச்சர் கிண்டலாகக் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com