திமுக மாநாட்டில் என்னென்ன சிறப்புகள்…? பட்டியலிட்ட அமைச்சர் நேரு!

அமைச்சர் கே.என். நேரு
அமைச்சர் கே.என். நேரு
Published on

திமுகவின் 12ஆவது மாநில மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு சிக்கன் கிரேவியுடன் பிரியாணி தயாராகி வருகிறது. திருச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு பத்து லட்சம் பேர் வருவார்கள் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணி செய்து வருகின்றன.

அந்தவகையில், இன்று திருச்சி சிறுகானூரில் திமுகவின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். தேர்தலுக்கு முந்தை மாநாடு என்பதால் அவர் முக்கியமான அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டின் சிறப்பு குறித்து பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு; “10 லட்சம் பேர் பங்கேற்கும் பெரிய மாநாடாக இது இருக்கும். 3 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. 2 லட்சம் பேர் நிற்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கழிவறை வசதியும் குடி தண்ணீரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4 லட்சம் பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

4 லட்சம் பேருக்கும் பிரியாணியுடம் கமகமக்கும் சிக்கன் கிரேவியும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com