நாடு முழுக்க இதே பிரச்னைதான்... அமைச்சர் நிர்மல்குமாரின் வித்தியாசமான விளக்கம்!

அமைச்சர் நிர்மல்குமார்
அமைச்சர் நிர்மல்குமார்
Published on

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக கடுமையான மின்தடை நிலவியது. இதனால் மின்சார விநியோகத்தைச் சீராக்கக் கோரி பல்வேறு ஊர்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

தலைநகர் சென்னையில் மந்தைவெளி உட்பட பல பகுதிகளில் மின்சாரம் தடைபடுவது தொடர்வதாக சமூக ஊடகங்களில் புகார்கள் கூறப்படுகின்றன. 

இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், “ சீரான மின்சாரம்...

"காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் தமிழகத்தில் இரண்டு நாள்களாக மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களிலும் நிலவும் தட்டுப்பாடு இது. நேற்று மாலை தமிழ்நாட்டின் தேவைக்கான மின்சாரம் பொது விநியோகத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதன்பிறகு அனைத்து பகுதிகளிலும் சீராக மின்சாரம் வழங்கப்பட்டது." என்று நிர்மல் குமார் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com