அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்காதது ஏன்?- நிர்மல்குமார் விளக்கம்

அமைச்சர் நிர்மல்குமார்
அமைச்சர் நிர்மல்குமார்
Published on

தமிழ்நாட்டில் புதிய அரசாங்கம் அமைந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் அமைச்சரவைப் பொறுப்புகள் அறிவிக்கப்படவில்லை. இதைப் பற்றி பரவலாக விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. ஆனால் முதலமைச்சர் விஜய் இதுகுறித்து கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. 

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “முதலமைச்சர் எல்லா துறைகளைப் பற்றியும் ஆய்வுசெய்து வருகிறார். அதில் எந்தத் துறைக்கு யார் பொருத்தமானவர் என்பதை அவர் தீர்மானிப்பார்.” என்று கூறினார். 

நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகே, மகளிர் உரிமைத் தொகை 2,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com