தமிழ் நாடு

திரைப்பட நடிகர் முத்துக்காளை உடல்நலம் குன்றிய தன் மனைவியை சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்கு ஆதரவு கேட்டு முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.
அவரின் இந்த வேண்டுகோள் காணொலி சமூக ஊடகங்களில் பரவலானது.
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி, அமைச்சர் இராஜ்மோகன் இன்று பிற்பகலில் மருத்துவமனைக்கே நேரில் சென்று முத்துக்காளையைச் சந்தித்து நலம்விசாரித்தார்.
மருத்துவர்களிடமும் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்து, உரிய கவனிப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.