1000 ஆண்டுகள் பழமையான 64 கோயில்களுக்கு திருப்பணிகள்!

Minister Ramesh
அமைச்சர் ரமேஷ்
Published on: 

இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்புகளை அமைச்சர் ரமேஷ் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

1) அதிக பக்தர்கள் வருகைதரும் 20 திருக்கோயில்களுக்கு ரூ. 3 கோடியில் அவசர கால ஊர்திகள் வாங்கப்படுவதோடு, மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களின் வசதிக்காக 38 திருக்கோயில்களில் ரூ. 30 லட்சத்தில் 62 மின்கல சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.

2) திருவள்ளூர், விருதுநகர் உட்பட்ட மாவட்டங்களில் உள்ள கோயில்களில் ரூ. 15 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

3) திருவண்ணாமலை, பழநி ஆகிய கோயில்களில் முறையே ரூ. 8 கோடி, ரூ. 7 கோடி செலவில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

4) சிதிலமடைந்த 100 திருக்கோயில் குளங்களைச் சீரமைக்க ரூ.40 கோடியில் புனரமைக்கப்படும்.

5) திருக்கோவில்களில் பழுதடைந்துள்ள 25 திருத்தேர்களின் சீரமைப்பு பணிகள் ரூ. 16 கோடியில் ஏற்படுத்தப்படுத்தப்படும்.

6) ஆயிரம் ஆண்டுகள் பழமையான 64 திருக்கோயில்களுக்கு ரூ. 125 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com