தமிழ் நாடு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் த.வெ.க. நிர்வாகிகள் அத்துமீறி சோதனை என்ற பெயரில் விசாரணை நடத்தினர். அது கடும் சர்ச்சைக்கு உள்ளானது.
ஆனால் அரசுத் தரப்பில் எந்த பதிலும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் சென்னையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, முதலமைச்சரும் த.வெ.க. பொதுச்செயலாளரும் மக்கள் பிரதிநிதிகளைத் தவிர மற்ற யாரும் இப்படி ஆய்வுகளில் ஈடுபடக்கூடாது என்று கூறியிருப்பதாகவும் இனி இப்படி நடக்காது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.