ஆளுநரே... இது உங்க ஏரியா இல்லை... அமைச்சர் நிர்மல்குமார் கண்டிப்பு

அமைச்சர் நிர்மல்குமார்
அமைச்சர் நிர்மல்குமார்
Published on

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் மாநில அரசு நிர்வாகத்தில் ஆய்வுசெய்வது தேவையில்லாதது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்துள்ளார். 

மாநில அரசின் துறைகளில் ஆய்வுசெய்ய அவருக்கு அதிகாரம் இல்லை; அவருடைய நோக்கம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் இயந்திரத்திலும் செயல்பாட்டிலும் தலையிட அவருக்கு அதிகாரம் இல்லை; ஆளுநர் மாளிகைக்குள் அவர் செயல்படட்டும் என்றும் அவர் கூறினார். 

வைகை ஆற்றில் தூர்வாருவதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கிடைத்ததும் அதைச் செய்வோம்; அவர் போய் தூர்வாருவாரா? சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவாரா? ஆளுநருக்கென உள்ள அதிகாரத்தில் மட்டும் அவர் செய்யவேண்டும்; தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கக்கூடாது; அதிகாரிகளும் முதலமைச்சர் அனுமதி இல்லாமல் அவருடைய ஆய்வில் பங்கேற்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல் கூறினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com