இலங்கையில் சிக்கிய படகுகள்... மொத்தம் ரூ.2 கோடி நிவாரணத் தொகை!

Minister Srinath
அமைச்சர் ஸ்ரீநாத்
Published on

சட்டப்பேரவையில் மீன்வளத் துறைக்கான அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் ஸ்ரீநாத் வெளியிட்டார்.

அறிவிப்பு விவரம்:

1) இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டும், மீட்கப்படாமல் இருக்கும் இராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு, விசைப்படகு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வீதமும், நாட்டுப்படகு ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வீதமும் என மொத்தம் ரூ. 1.86 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும்.

2) கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில், ஒருங்கிணைந்த வெப்பநிலை கட்டுப்படுத்தும் - டிஜிட்டல் மீன் ஏலக் கூடம் அமைக்கப்படும்.

3) மீன்வளம் - நீர்வாழ் உயிரின வளர்ப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு, திறனறி தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்.

4) கடலில் மீன்பிடிக்கும் போது, அண்டை நாட்டினரால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு, தற்போது வழங்கப்படும் தினசரி ரூபாய் 500 உதவித்தொகையிலிருந்து ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

5) திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் அதிநவீன மீன் சந்தை அமைக்கப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com