
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்றும் அவரது கட்சியினர் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர்.
அக்கட்சியின் வேட்பாளர்கள், அமைச்சர்கள் பொதுச் செயலாளர் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, கே.ஆர். பெரியகருப்பன், சு. முத்துசாமி, சி.வீ. மெய்யநாதன், சி.வி. கணேசன் ஆகியோரும்,
செந்தில்பாலாஜி, துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின், டி.ஜெ. கோவிந்தராஜன், சபா. இராஜேந்திரன், நாமக்கல் இராணி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கே.எஸ். மூர்த்தி, ரெ. மகேஷ், ஆ. தமிழரசி, எஸ்.ஏ. சத்யா, மு.மணிகண்டன், புதுச்சேரி ஆர். சிவா ஆகியோரும் இன்றைய சந்திப்பில் இடம்பெற்றனர்.
அப்போது தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித்தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
தேர்தல் வெற்றிவாய்ப்பு, பணிகள் குறித்து அனைவரிடமும் ஸ்டாலின் கேட்டறிந்தார்.