நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றிருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
பிரதமரிடம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் படகுகளை மீட்கவும் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்பதை பட்டியலிட்டுள்ளேன். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளேன். செங்கல்பட்டு- திண்டிவனம் சாலையை எட்டு வழி சாலையாக அமைக்கவும் கோரிக்கை விடுத்தேன். கோவை, மதுரையில் மெட்ரோ திட்டம் அமைப்பது குறித்து பேசினேன். நமக்கு மறுக்கப்பட்ட கல்வி நிதி கிடைக்கும் என நம்பிக்கையோடு இருப்போம் என அவர் கூறினார்.
பிரதமரை சந்திக்க வந்திருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து உள்ளாரே என்ற கேள்விக்கு ‘ அவர் சொன்னதுபோல் என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை. அவரிடம் உள்ள காவிக் கொடியுமில்லை’ என பதிலளித்தார்.