
தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா எனக் கேட்டு, ஐந்து கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள சமூகஊடகப் பதிவு:
”தமிழ் மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது!” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.