வெளியூர் போகும் முதல்வரே, உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய்ட்டு வாங்க!

Basic things price raised
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு
Published on: 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி, பருப்பு, சர்க்கரை உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஒரு மூட்டை அரிசியின் விலை ரூ. 300 முதல் ரூ. 600 வரை அதிகரித்து உள்ளது. இதேபோல, ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.10-ம், ஒரு கிலோ சீரகத்தின் விலை ரூ. 10-ம் அதிகரித்து உள்ளன.

ஆயுத பூஜை, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைக்கால கொண்டாட்டங்களில் மக்கள் சிரமப்பட நேரிடும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Basic food items price
அத்தியாவசியப் பொருட்களின் விலை

இதுகுறித்து, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"முதலமைச்சர் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...

அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தயவுசெய்து, உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார். மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்!" என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com