பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை- ஸ்டாலின் கண்டனம்

ஸ்டாலினுடன் பினராயி விஜயன்
ஸ்டாலினுடன் பினராயி விஜயன்
Published on

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை ரெய்டுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

”எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஏவிவிடும் இத்தகைய போக்கு மிகவும் தவறானது.

"திரு. பினராயி விஜயன் அவர்கள் ஏன் இதுவரை பா.ஜ.க.வால் குறிவைக்கப்படவில்லை?" எனப் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த சில காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுகள் பொருளற்றவை என்பதையும் இந்த ரெய்டுகள் அம்பலப்படுத்தியுள்ளன.” என்று இராகுல்காந்தியை மறைமுகமாகச் சாடியும் மு.க.ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com