கொளத்தூர் பிரச்சாரத்தில் கால்பந்து ஆடி உற்சாகமூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
கொளத்தூர் பிரச்சாரத்தில் கால்பந்து ஆடி உற்சாகமூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் தெருக்களில் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள்களாக சென்னைப் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். 

வடசென்னை கலாநிதி வீராசாமி, மைய சென்னை தயாநிதி மாறன் ஆகியோருக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்று காலையில் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஜீப்பில் தெருத்தெருவாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

பிரச்சாரத்தின்போது கால்பந்து மைதானத்தில் ஸ்டாலின்
பிரச்சாரத்தின்போது கால்பந்து மைதானத்தில் ஸ்டாலின்

கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களிடம் அவர்களுக்கு மேற்கொண்டு தேவைகள் என்னென்ன எனக் கேட்டறிந்தார். 

சில இடங்களில் இசைக் கருவிகள் முழங்க ஸ்டாலினுக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். 

அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.பி. கிரி, வாரியத் தலைவர் புரசை ரங்கநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்களும் உடனிருந்தனர்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com