
பரபரப்பான விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்கள் ஒருவழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் த.வெ.க. தலைவர் விஜய்யும் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் உதயநிதி மாநிலம் முழுவதும் 135 தொகுதிகளில் இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார். பறந்து பறந்து பிரச்சாரம் செய்த அவர், நேற்று காலையில் ஓய்வுக்காக வெளிநாட்டுக்குப் புறப்பட்டார்.
குடும்பத்தினருடன் துபாயில் தங்கி அவர் ஓய்வெடுப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் தன் மனைவி துர்காவுடன் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்குச் சென்றார். அங்கிருந்து காரில் கொடைக்கானலுக்குச் சென்றார்.
அங்குள்ள தனியார் விடுதியில் அவர் நான்கு அல்லது ஐந்து நாள்கள் தங்கி ஓய்வெடுப்பார் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.