காணொலிக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்
காணொலிக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

டாப் ஆங்கிள் காட்சி - தி.மு.க. நிர்வாகிகளைப் பாராட்டிய மு.க.ஸ்டாலின்!

தேர்தல் பணிகள் தொடர்பாக தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் நடத்தப்பட்ட பெரிய பொதுக்கூட்டங்களுக்காக நிர்வாகிகளைப் பாராட்டினார்.

காணொலிவாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் அவர்களிடம் பேசுகையில், “ ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன். அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி. திரைகளுடன் பிரமாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்டபுகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது.” என்று ஒவ்வோர் அம்சத்தையும் குறிப்பிட்டு ஸ்டாலின் பாராட்டினார்.

”மிகச் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்கள் உட்பட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம்முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன.  தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.” என்றும் அவர் கூறினார்.

நம்முடைய ஒவ்வொரு திட்டம்பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்யவேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும்வகையில் பரப்புரை செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com